Blog Archive

Friday, September 29, 2006

பொதிகை தரும் தென்றல்





பொதிகை என்றதும் நினைவுக்கு வருவது

சாரல், இதமான காற்று. அருவியின் ஓசை,

அருவியை ஒட்டிய வீடுகளைக் கொண்ட அதிர்ஷ்ட மனிதர்கள்.

திருப்பதி செல்லுவது போல் குற்றாலத்துக்குச் செல்வதையும் குறிக்கோளாகக் கொண்ட

சில நண்பரகள்.

குற்றாலம் அனுபவித்த மாமனிதர்கள்.

அவர்களைப் படித்து ,தெரிந்து களிக்கும் நாம்.

இப்படி இன்னும் எத்தனையோ பெருமை வளர்

இன்னும் ஒரு நன்மையும் செய்கிறது.

நம் தொலைக்காட்சி வழியாக வரும் பொதிகைச்

சானலைத் தான் சொல்கிறேன்.

முன்பு தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்திலும்

நாம் பல நல்ல விஷயங்களைக் கண்டிருக்கிறொம்.

இப்போது இன்னும் மெருகேறி

கமர்ஷியல் என்னும் இனிப்பு (தடவிய நச்சு) கொஞ்சமே பரவி நல்ல சேவைகளைக் கொடுத்து வருகிறது.

நம்பிக்கையுடன் எந்த நேரம் பொதிகைக்குப் போனாலும், சீரியல் நேரங்களைத்தவிர,

நன்மை தரும் பலநிகழ்வுகளைக் காண முடியும்.

எல்லாத் தரப்பினருக்கும் பரபரப்பு இல்லாத நிதானத்துடன் ரசிக்க,

காலையில் நல்ல கர்னாடக இசை, பிறகு

விவசாயிகளுக்காக, அப்புறம்

காலைத் தென்றல்.

காலைத் தென்றல் ஒரு அனுபவமாகத் தினம் மலர்கிறது.

தினம் ஒரு குறள்.

அதை விளக்கிச் சொல்ல கற்றவர்கள். காலைதென்றல் நமக்கு அளிக்கும் திருமதிகள் விமலா,ஜயஸ்ரீ, சுதா மற்றும்

குறளை அழகாகப் பாடிக்காட்டும் உத்ரா,திருமதி. சித்ரா(அன்பான சிரிப்பு இவருடைய டிரேட் மார்க்),

திருமதி ஜயந்தி,

இவர்களுடன் இணைந்து , முரண்படாமல்

கவிதையாகப் பொழியும் நெல்லை ஜயந்தா, கவிஞர் யுகபாரதி , கதைகள் நீதியோடு வழங்கும் திரு

நந்தலாலா என்று பண்பட்ட படைப்பாளிகள்.

பெயர் விட்டுப் போனவர்கள் இருக்கக் கட்டாயம் வாய்ப்புண்டு.

ஏனெனில் ஒரு நிமிடம் தப்பினால் கூட, அவர்கள் பெயர் வந்து மறைந்துவிடும்.

இப்போதுதான் 2 வருடங்களாகப் பொதிகையைப் பார்ப்பதால்,

இன்னும் எத்தனை நிகழ்ச்சிகளை தவற விட்டேனோ என்று ஏக்கமாக இருக்கிறது.

தினம் தினம் புதிய நிகழ்ச்சிகள்.

கோவில்கள், கூடவே வரும் அருமையான சத்தம் இல்லாத வர்ணனை.

பிரபலங்களின் சந்திப்பு,அவர்கள் பேசும்போது

குறுக்கிடாத ,ஆனால் பயனளிக்கும்

இதமான கேள்விகள்.

இன்று கூட கணினி வல்லுனர், எழுத்தாளர் திரு.என்.சொக்கன் அவர்களின் பேட்டி

இருந்தது.

இதே போல வாரந்தோறும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்

ஏராளம்.

எங்கள் காலைகளை வளப்படுத்தும்

பொதிகைக்கும் காலைத்தென்றலுக்கும் நன்றி.

9 comments:

துளசி கோபால் said...

கர்நாடக இசையும் காலையில் கொஞ்சநேரம் வருதோ?

ச்சென்னை வந்தப்ப காலையில் பார்த்த ஞாபகம்.

இங்கே நான் டிவி பார்ப்பதில்லை.

முக்கியமாக சீரியல்கள்.( ஆங்கிலம்)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி காலை 5 மணிக்கு
கர்னாடக இசை உண்டு.
சீரியலகள் பார்க்காமல் இருக்கும் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.
அவைகள் இல்லாமலே எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும்மா.

Geetha Sambasivam said...

உண்மையிலே பொதிகை நல்ல நிகழ்ச்சிகளைத் தான் தருகிறது.
ஆனால் வர்த்தகத் தொலைக்காட்சி ஊடகங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. முக்கியமாக "வெளிச்சத்தின் மறுபக்கம்" என்ற நிகழ்ச்சி எத்தனை நாட்களாகத் தொடர்ந்து வருகிறது தெரியுமா?

Geetha Sambasivam said...

உண்மையிலே பொதிகை நல்ல நிகழ்ச்சிகளைத் தான் தருகிறது.
ஆனால் வர்த்தகத் தொலைக்காட்சி ஊடகங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. முக்கியமாக "வெளிச்சத்தின் மறுபக்கம்" என்ற நிகழ்ச்சி எத்தனை நாட்களாகத் தொடர்ந்து வருகிறது தெரியுமா?

FAIRY said...

அங்கே இருந்த பொழுது பார்த்ததோடு சரி. இங்கு வந்து...... கேட்க மலரும் நினைவுகள் தான்.

வல்லிசிம்ஹன் said...

கீதா, நீங்களும் பார்ப்பீர்களா?

வெளிச்சத்தின் மறுபக்கம்,
திரு.பாலன் நடத்துவதுதானே?
ரசித்துப் பார்க்கலாம். ரொம்ப நேச்சுரலா இருக்கும்.

நல்லதொரு நிகழ்ச்சி.

தி. ரா. ச.(T.R.C.) said...

என்னுடைய வோட் பொதிகைக்கு மட்டும்தான்.அதுவும் இப்போ நவராத்திரி பாடல்கள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தி.ரா.ச,
காலையில் இப்போது திருப்பதி
உத்சவம் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

வர்ணனையும் அருமையாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

fairy,
எப்போது இந்தப் பக்கம் வருவீங்க?