Blog Archive

Thursday, September 21, 2006

நவராத்திரி வாழ்த்துக்கள்

மஹாளய அமாவாசை நாளை 22 ஆம் தேதி. நாளையே இரண்டு பொம்மைகளையாவது எடுத்து வைத்துவிட்டால்

கொலு நவராத்திரி ஆரம்பித்துவிடும்.
நகரம் ஒர் மாதமாகவே பண்டிகைக்கோலம் போட்டாச்சு. எங்கே பார்த்தாலும் சேல் !! சேல்!! எதை எடுத்தாலும் தள்ளுபடி. புதுவிதமான
புதுசு புதிசாக உடைகள். வித விதமான கண்ணைப் பறிக்கும் விளம்பரங்கள்.

எது வாங்குவது?
முதலில் பொம்மை விற்கும் கடைக்குப் போனால் படைக்கும் கடவுளுக்குப் போட்டியாகப்
படைக்கப்பட்ட
வண்ண வண்ண பொம்மைகள்.
கடவுளர்கள், மிருகங்கள், காட்சிகள் இன்னும் எத்தனை வகை.
அதிலும் வேறு வேறு ஊர்களிலிருந்து
வகை வகையாய் செய்யப் பட்ட, வார்க்கப் பட்ட
அருமையான உணர்ச்சிகளை, அருளை, இன்பத்தை அளிக்கும் அற்புதமான உருவங்கள்.

இவர்கள் எல்லோரும் வந்து நம் வீட்டில் இருந்து,
நம் உலகை நினைக்க வைத்து ,
ஒன்பது
நாட்களும் மகிழ்ச்சியை வாரிக்கொடுக்கும்
உயிர்கள்.
ஆமாம், நம்முடைய பிரதிகள் தானே
இந்தக் கொலு.

அதனால் வரும் நவராத்திரிகளும் அனைவரும் கூடியிருந்து கொண்டாடித் துதி செய்து
உய்யலாம்.
நவராத்திரி வாழ்த்துக்கள்.

6 comments:

துளசி கோபால் said...

//இரண்டு பொம்மைகளையாவது எடுத்து வைத்துவிட்டால் கொலு//

இருக்கறதே ரெண்டு பொம்மைங்கதான். எடுத்து வச்சாப்போச்சு:-))))

பண்டிகைகால வாழ்த்து(க்)கள் வல்லி

ஜயராமன் said...

நவராத்திரி வாழ்த்துக்கள்.

5 படி வைத்து கொலு வழக்கம்போல ரெடியாகிவிடும். எங்கள் வீட்டில் இந்த வருடம் என் 7 மாத பெண் குழந்தையும் கொலு கொண்டாடுவாள். ஒவ்வொரு வருஷமும் ஒரு புதிய பொம்மையாவது வாங்கினால்தான் திருப்தி. இந்த வருஷம் இதுவரை ஒன்னுமில்லை. வாங்க வேண்டும். அம்மா கொடுத்த பொம்மைகள் கொஞ்சம் பழதாகி விட்டன. தூக்கிப்போட மனசில்லை. அதை பெயிண்ட் பண்ணிக்கோ என்று அம்மா சொன்னாள். இனிமேல்தான் ட்ரை பண்ண வேண்டும்.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அதற்கு பதிலாக என் சுய புராணம் பாடி விட்டேன்.

கொலுக்கு சுண்டலுடன் கூப்பிடுங்கள்.

நன்றி

துளசி கோபால் said...

ஜயராமன்,

//ஒவ்வொரு வருஷமும் ஒரு புதிய பொம்மையாவது வாங்கினால்தான்
திருப்தி. இந்த வருஷம் இதுவரை ஒன்னுமில்லை//

//என் 7 மாத பெண் குழந்தையும் கொலு கொண்டாடுவாள்//

அதான் தங்க விக்கிரகமாட்டம் குழந்தை இருக்கறப்ப புது பொம்மை எதுக்கு?

வாழ்த்து(க்)கள்.

வல்லிசிம்ஹன் said...

துளசி, கொலுவுக்கு இன்விடேஷன்
அனுப்புங்க.
என்ன கிஃப்ட் கொடுக்கப் போறீங்க?

ஒரு மைசூர்பாகு, ஒரு வடை,சுண்டல்,ஒரு செராமிக் மெர்மைட். இப்போதைக்கு இது லிஸ்ட். இன்னும் 10 நாள் இருக்கே.
ஒரு பொம்மை கூட போறூமே. நமக்கு என்ன காரணம்
ஏதாவது வேணுமா என்ன.:-))

வல்லிசிம்ஹன் said...

ஜயராமன், கட்டாயம் சுண்டல் உண்டு. பெண்ணுக்கு பாவாடை சட்டை வாங்கியாச்சா?

தி. ரா. ச.(T.R.C.) said...

நண்பர்களையும் உறவினர்களயும் கூட்டிவைத்து கூட்டுபிரார்த்தனைக்கு நம் முன்னோர்கள் வகுத்த வழிதான் நவராத்திரி