Blog Archive

Tuesday, August 01, 2006

நிலைத்து இருக்கும் உறவுகள்


?



சுற்றத்தின் குற்றம் பார்க்காவிட்டால் உறவுகள் நிலைக்கும்.
இது தான் எனக்குக் கிடைத்த பாடம்.
நேரிடையாக இல்லை எனினும்
அறியாப் பருவம் என்று சொல்லப்படும் நான்கு, ஐந்து வயதிலிருந்தே அவளைத் தெரியும்.
அவள் வ்ஈட்டில் நான் இருப்பேன்.
இல்லையானால் என் வீட்டில் அவள் இருப்பாள்.
எனக்கு இரண்டு சகோதரர்கள் மட்டுமே என்பதால் மற்ற தோழிகள் வீட்டிற்கு என் சாப்பாட்டு வேலை முடிந்ததும் ஓடிவிடுவேன்.
மறுபடி பசி எடுக்கும்போது வீட்டு நினைவு வரும்.
நாங்கள் இருந்த இடம் கிராமமா இல்லை டவுனா?
தெரியாது.
குழந்தைகள் ஓடி விளையாட தெருக்கள்.
மாட்டு வண்டிகள் போகும். ஊருக்கு இருந்த இரண்டு வழித்தடங்களில் ஒன்று எங்கள் ரோடு.
உசிலம்பட்டி மதுரை, டி.கல்லுபட்டி
பெயர் கொண்ட பஸ்கள் ஒரு நாளுக்கு 4 தடவை போகும்.
தெருமுனையில் மீனாட்சிஅம்மன் கோவில்.
அடுத்த முனையில்
அரச மரமும் பிள்ளையாரும்.அவரைத் தாண்டினால்
என் இன்னொரு தோழி கேட்டியின்(காதரின்)) வீடு.
அடுத்த காம்பவுண்டு எங்க அப்பாவின் வேலையிடம்.
தபால் ஆபீஸ்.
அதையும் தாண்டினால் ஒரு சின்ன முனையில் மாடுகளும்,பாலும், உமியும், தவிடும், விரட்டிகளும் நிறைந்து கலப்பட வாசனையோடு ஒரு பால்க்கார ஆயா வீடு.
எதிர் வரிசையில் உடுப்பி லன்ச் ஹோம்.

தள்ளி நடந்தால் போர்டு ஹைஸ்கூல். அதற்கு நேர் எதிராக பஸ் நிலையம்.(அப்போது) முக்கியமான இடம் இதொ அந்த நிலையத்தைத் தாண்டி வலது பக்கம் . இருக்கிறது.
எங்கள் ஆனந்தா தியேட்டர்.
3 மாதத்திற்கு ஒரு தடவையாவது நங்கள் ப்டம் பார்க்கப் போகும் இடம்.
இவ்வளவு விரிவாகத் திருமங்கலத்தை விவரிக்கக் காரணம், நானும் செண்பகமும் மேற்கூறிய இடங்களுக்கு
ஏதாவது ஒரு காரணம் வைத்துக் கொண்டு போய் வருவோம்.
பல் தேய்க்க உமிக்கரி செய்ய வேண்டும், ஓடு ஆயாம்மா வீட்டுக்கு. இரண்டு படி உமி கொண்டு வந்துவிடுவோம்.
செண்பகம் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. நாங்க ரெடி. ஒரே ஒரு ரூபாய்க்கு நான்கு தோசை பார்சல் கிடைக்கும்.
உடுப்பி ஹோட்டல் மீண்டும் வீடு.
அவர்கள் வீட்டில் மொத்தம் ஐந்து பெண்களும் அம்மாவும் அப்பாவும்.
அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் முக்கியமானவர்கள் மேலூர் சித்தப்பா கணபதியும் அவர் சம்சாரம் காஞ்சனாம்மாவும் அவங்க முதல் மகள் காந்திமதி,இராண்டாவது பையன் சந்திரனும்.
தம்பி சின்னவன். அக்கா 16 வயதுஇருக்கும். சரொஜா அக்கா (செண்பகத்தோட முதல் அக்கா)) ஈடு.
என் தோழியின் அப்பா முருகேசன் மாமா மளிகைக்கடை வைத்து இருந்தாலும் அவ்வளவு வசதி போதாது. வாணிகருக்கு வேண்டாத குணம் ஒன்று இருந்தது அவருக்கு.. அதான் கனீவாய் எல்லோருக்கும் கடனைக் கொடுத்து விடுவார்,
திருப்பிக் கேட்கத் தெரியாது.
பாவம் அவ்ரகளுக்கு என்ன கஷ்டமோ என்பார்..
அதற்கு ஏற்ற மனைவி.
வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.
அந்த அம்மா செய்யும் குழம்பு மட்டும் போதும்.
நல்ல கத்திரிக்காய் வற்றல், பூண்டு ரசம், நிறைய பெரிய பானையில் வடித்த சுடு சாதம்.
அவர்கள் மோர் தயிர் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை.
தட்டுகளும் அலுமினியத்தில் ஆனதுதான்.
நான் அங்கே போனால் எனக்குத் தனியாக ஒரு சிலுவர்
தட்டு இருக்கும். ஐயர் வீட்டுப் பொண்ணு என்று.
அதே போல செண்பகாவுக்கும் எங்க வீட்டில ஸ்பெஷல் டிரீட் தான்.
அம்மா செய்யும் எல்லாம் தனித் தனி பாத்திரங்களில் மூடி போட்டு அங்கே போய்விடும்.
அப்பாவும் செண்பகாவின் அப்பாவும் குடை பிடித்து ஒன்றாகப் போவதைப் பார்த்தால் எத்தனை நாள் பழக்கமோ என்று தோணும்.
இந்த நிலையில் தான் ஒரு நாள் காஞ்சனாம்மா வந்தாங்க.
தன் பெண்ணுக்கு ,மாப்பிள்ளை வீட்டு மனிதர்கள் வருவதாகவும், அண்ணனும் அண்ணியும் வரவேண்டும் என்று சொல்லி வீட்டுப் போய்விட்ட்டார்கள்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தோம் நானும் சென்பகாவும்.
எங்க அம்மா நீங்கள் இங்கேயே இருங்க. அப்புறம் வீட்டுக்குப் போகலாம்ென்றர்கள்.
அம்மா முகத்தீல் கவலை.
நாங்களும் சமத்துப் பிள்ளைகளாக பாடம் எழுத உட்கார்ந்து விடடோம்.
பிரகு தான் விஷயம் தெரியும்.
சரோஜா அக்காவுக்காக ஏற்கனவே நினைத்து முடிவு செய்த வரனைத்தான் சித்தியும் பேசி(அதற்கு பணம் பேசியது என்ற அர்த்தம்)
அந்த அத்தான் மதுரையில் கவர்ன்மெண்ட் வேலையில் இருந்தார்.

எங்கா அம்மா கூட ச்ோஜா அக்காவை மெலிதாக சிரிக்க வைப்பதைப் பார்த்து இருக்கிறேன்.
அந்த நாளுக்கான சோகம் என்ன என்றால், அக்கா சாப்பிடாமல் படுத்து விட்டதுதான்.
யார் சொல்லியும் கேட்கவில்லை.
நாங்கள் எல்லோரும் ஒருதரம் மதுரைக்குப் போனபோது
அந்த தங்கதுரை அண்ணனும் எங்காளோடு இரும்புத்திரை சினிமா பார்க்கத் தங்கம் தியேட்டருக்கு வந்ததும், அக்காவோடு சிரித்துப் பேசியதும் ஞாபகம் வந்தன.
எங்க காதல் ஐடியாக்கள் எல்லாம், சிவாஜி,மற்றும் ஹீரோயின்க்ள் நீண்ட நேரம் ஒருத்தரைப் பார்த்தால் அடுத்தாபுல பாட்டு வரும் என்பதுதான்.
அதனால் ச்ோஜா அக்காவின் அழுகை புரியவில்லை
இதையும் மீறி செண்பகத்தின் அம்மாவும் அப்பாவும்
அடுத்த நாள் மேலூருக்குப் பயணம் ஆனார்கள்.
என் அப்பாவிடம் சரோஜாவைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு.
அப்பாகூட முயற்சி செய்தார் சரொஜா பாவம் நாமா ஏதாவது தங்கதுரைகிட்ட பேசி நடத்தலாம்னு.
அவர் ஒத்துக்கொள்ளவில்லை. தம்பி பார்த்த வரனை நாம் கலைக்கக் கூடாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
அக்காவுக்கு எப்படியாவது அந்தக் கல்யாணம் நின்று விடும் எந்று தோன்றிவிட்டது.
எங்களோடு பாண்டி, ஏழு கல் எல்லாம் விளயாடிவிட்டு, சமைத்து வைப்பதாக சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனாள்.
நாங்களும் கூடவே போய்த் துணை இருந்தோம்.
இரவு ஆனதும் எல்லோருக்கும் வரிசையாகத் தட்டு வைத்து அழகாகப் பரிமாறினாள்.
வாசலில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு
போனவர்கள் தான் வந்துவிட்டார்கள் என்கிற சந்தோஷத்தில் ஓடினோம்.
அங்கே நின்றது தங்கதுரை அண்ணன்.!
சரோஜாவுக்கு இதுவரை இருந்த சந்தோஷமும் போச்சு.
திருமணம் சொல்ல வந்திகளோ என்று
பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டாள். நாங்கள் ஆ'
வென்று வாய் திறந்து பார்த்தோம்.
இதற்குள் சத்தம் கேட்டு அப்பாவும் வந்து வ்இட்டார்.
அட நீ எங்கப்பா இங்கே வந்தே என்று கேட்டதற்கு
அந்த அண்ணன் தலையை தொங்கப் போட்டபடி
எனக்கு அதிலே இஷ்டம் இல்லீங்க சார்.
கேக்காம முடிவு செய்துட்டாங்க.
சரோஜாவைத்தான் நான் கட்டுவேன் என்று தீர்மானமாகச் சொன்னதும்,
அப்பா அவனை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்குப் போனார்.
அதற்குல் அப்பா ஆபீசிலிருந்து தந்தி கொடுக்கும் பையன் வந்துவிட்டான்.
சார் தந்தி வந்து இருக்கு". எடுக்க கூட்டி. வர சொன்னாங்க'
அப்பா உடனே கிளம்பினார். அப்பாவே பொஸ்ட்,தந்தி எல்லாம் பார்க்கும் வழக்கம் அப்பொது. பிற்கு தான் போன் வந்தது..'
மீதி சினிமா கதை தோற்றது.
அங்கே காந்திமதி அக்கா மாப்பிள்ளையை நான் கட்ட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து ,
அவளோட மாமாவைப் பார்க்க சமயபுரத்துக்குப் போய் விட்டாளாம்.
மேலூர் போஸ்ட்மாஸ்டரும் அப்பாவும் கட்டு கட கட தந்தி முறையில் பேசிய விஷயம் இது.

அடுத்த நாள் தான் அவர்கள் வரமுடியும் என்றும்
சேதி.பக்கத்து வீட்டு வாஞ்சிமாமா,இன்னும் பல பேர் கூடி
தங்கதுரையை எங்க வீட்டில் தங்க வைப்பது, மத்தது காலைலே'' என்று பிரிந்தனர்

சரோஜா ,செண்பகம்,மல்லிகா,தாமரை,சின்னப்பொண்ணு எல்லோருக்கும் காவலாக நானும் என் தம்பிகளும்.

மறுநாள் எட்டரை மணி பஸ்ஸில் சகலரும் வந்தாச்சு.
தங்கதுரைக்கு எங்க வீட்டில் ராஜ உப்சாரம்.
நாங்கள் பள்ளிக்கூட்ம போயே ஆக வேண்டும் என்று
அனுப்பி விட்டார்கள்.
மதியம் சாப்பாடும் கையில்.
மூன்று மணி அளவில் நாங்கள் ஸ்கூலை விட்டு வெளியே வரவும் மாமாவும் தங்கதுரையும் மதுரை பஸ் ஏறவும் சரியாக இருந்த்து.
துரையும் மாமாவும் பஸ்ஸிலிருந்து கை ஆட்டி விடை பெற்றார்கள்.
ஒரு கல்யாணத்தை எதிர்பார்த்து இருந்த எங்களுக்கு
இது அதிர்ச்சி. யோசித்துக்கொண்டு வீடு வந்தோம்.
ஒருவர் முகத்திலும் ஈயாட வில்லை.
மாமா எங்கே போகிறார் என்று கேட்டதற்கு தெரியாது. பதில்தான்.
ஒரு வாரம் கழித்து மீண்டும் செண்பகத்தின் வீட்டில் சந்தடி.
கணபதி சித்தப்பா,தங்கதுரை அம்மா அப்பா, சித்தியின் பெற்றோர்கள் என்று வீடே நிரம்பியது.
முடிவு?
நல்லதுதான்.
முரைப்படி பெண் கேட்டு சரோஜா அக்கா,தங்கதுரை அத்தான்கலயாணமும்,
முருகேச மாமா(அண்ணனாக) பெண்கொடுக்க சமயபுரம்
மாமா,காந்திமதி திருமணமும்
நிச்சயித்து எங்க மீனாட்சி அம்மன் கோவிலிலேயே பந்தல் போட்டு,
பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் கச்சேரியோடு இனிதே
திருமணங்கள் நடந்தன.
ஆனமட்டும் நானும் செண்பகமும் கேட்டும் அந்த கமலா சவுண்ட் சர்விஸ் மாணிக்கம்
வீரபாண்டியக் கட்டபொம்மன் வசனம் போட மறுத்து
விட்டான்.
இந்த்க கல்யாணங்களை நடத்தியது யார் தெரியுமா/ காந்திமதிச் சித்தியின் பெற்றோர்கள் தான்.
யாருக்கும் செலவு வைக்காமல் சுபமாக நடத்தி
பெருமை தேடிக் கொண்டார்கள்.
அதை இப்போது நினைக்கும் போது , நாம் எப்படி
மற்றவர்களைக் குறைவாக எடை போட்டு விடுகிறொம் என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

இந்த நிகழ்வுக்கு வில்லன் கதா பாத்திரம் என்று
நான் நினத்த காஞ்சனாம்மா

கல்யாணம் நடக்கவே காரணமாக இருந்தார்கள்.
ரொம்ப சாது என்று எல்லோரிடமும் பேர் வாங்கின சரோஜா அக்கா தீர்மானம் காட்டினாள்.
தெளிவாக இருக்கும் முருகேசன் மாமா கலங்கினார்.

படபடப்பு காட்டும் காஞ்சனா சித்தி
நல்ல முடிவு எடுத்தாள்.

ஆகக்கூடித் தேன்கூட்டிற்கு உறவுகள் பற்றி
எழுத எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.

6 comments:

வல்லிசிம்ஹன் said...

டெஸ்ட்

Sivabalan said...

வள்ளி,

நல்லா எழுதியிருகிறீங்க... நேரில் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தீட்டிங்க..

படங்கள் நல்லா இருக்கு.

தேன் கூடு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

நன்றி.

துளசி கோபால் said...

வல்லி,

ஆமாம், இது எந்த திருமங்கலம்? மதுரைத் திருமங்கலம்தானே?

நாங்களும் அங்கே இருந்திருக்கிறோமேப்பா.

நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சதெ அங்கேதான்.

வல்லிசிம்ஹன் said...

துளசி, நிஜமாவா?
அந்தப் பெரிய டீச்சர் இருப்பாங்களே அந்த ஆதாரக் கல்வி நிலயத்திலேயா படித்திர்கள்?
நாங்க 1953 டூ 1960 அங்கே இருந்தோம்.
என்னய்யா இது அதிசயம்!!!!!!!
எங்கே வீடு?என்ன துளசி அப்பவே fஃரண்ட் பிடிச்சிருக்கலாமே.
சின்னப் பிள்ளயா இருந்திருப்பீஙக.
ரொம்ப ரொம்ப நன்றி. திருமஙகலம் தெரிந்தவரை இப்போது என் அருமை நண்பியாகப் பார்ப்பது!!yaaaaaaaaaayyyyy

வல்லிசிம்ஹன் said...

வாங்க, சிவபாலன்.பசங்களுக்கு கதை சொல்லியே அதே போல வருகிறதுனு நினைக்கிறேன்.
ப்ரமாதக் கதையில்லை.
சும்மா எழுதி வைத்தேன்..ஜாம்பவான்கள் பெயர்கள் பக்கத்தில் நம்ம பேரும் வரட்டுமே என்றுதான்.:-))
மகிழ்ச்சிகரமான நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

துளசியோட பதிவிலே உங்க கிளி கத்திக் கத்திக் கூப்பிட்டது. அப்புறம்தான் தெரிஞ்சது நீங்கன்னு. சும்மா வெளுத்துக் கட்டறீங்க போல் இருக்கு! :D