Blog Archive

Thursday, July 20, 2006

புது வரவு, நல்வரவு


என் அன்பு சக வலைப்பூ நண்பர்களுக்கும்,சினேகிதிகளுக்கும்
மனு வல்லி சந்தோஷத்துடன் தரும் சேதி.
புதிய வரவான எங்கள் பேத்தி.

மனம் நிறைந்த ஆசிகளைக்
கோருபவள்,
எங்கள் புத்தம் புதிய பேத்தி.

ஆடி மாதம், முதல் தேதி, திங்கள் கிழமை july 17th
இரவு 10.45க்கு

பிறந்து இருக்கிறாள்.

ரேவதி,நரசிம்ஹன் பாட்டி&தாத்தா

14 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆ ஹா லக்ஷ்மி ந்ருஸிம்மனின் கருணையே கருணை. பாருங்கள் படத்தை போட்டவுடன் வந்து விட்டார். "மறுபடியும் வல்லியம்மா". நல்ல செய்தி. குழந்தைக்கும் மற்றவருக்கும் என் ஆசிகள்.தீர்காஷ்யுமான் பவ.

துளசி கோபால் said...

மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

அன்பும் ஆசியும் குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும்.

கொஞ்சம் பெருசானவுடன் ப்ளொக் ஆரம்பிச்சுக் கொடுங்க :-))))

G.Ragavan said...

உளமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பூரிப்பும் பெருமகிழ்ச்சியும் புரிகிறது.

முத்துகுமரன் said...

புதிய மலருக்கு அன்பான வரவேற்புகளும் வாழ்த்துகளும்

Geetha Sambasivam said...

உஸ்,உஸ்,உஸ்,உஸ், அப்பாடி, ஒரு வழியா உங்க வலைப்பக்கத்துக்கு வந்திருக்கேன். முதலில் வாழ்த்துக்களைப் பிடிங்க. உங்களுக்கும், உங்க கணவருக்கும், உங்க மருமகளுக்கும் வாழ்த்துக்கள். குழந்தைக்கு என்னோட ஆசிகள்.மூச்சு வாங்குது, அப்புறம் சாவகாசமா வரேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தி.ரா.ச,
பேத்திக்கு வல்லி என்றும் ஸ்ரீ என்றும் பெயர் வைக்க ஆசை தான்.

வோட் எப்படி வருகிறது என்று பார்க்கலாம்.:-))

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, உங்கள் ஆசியும் கோபால் ஆசியும் வந்து சேர்ந்தன.

தான்க்க்ஸ்பா.

வல்லிசிம்ஹன் said...

ராகவன், ரொம்ப நன்றி. முதல் வருகை எங்கள் பேத்தியை வாழ்த்துவதற்காக வந்துவிட்டீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி முத்துக்குமரன்,
எங்கள் பேத்திக்கு நெட் மூலம் வாழ்த்துக்கள் வருவது எனக்கு அதிசயமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

கீதா அன்னியலோகம் வழி வந்தீர்களா>
ரொம்ப தான்க்ஸ்மா. குட்டி கிட்ட சொல்றேன். வ.வா.சங்கத்தலவலியேஎ
வந்துவிட்டு ஆசீர்வாதம் பண்ணாங்கனு.

Thekkikattan|தெகா said...

என்ன யாருன்னே உங்களுக்குத் தெரியாது, இருந்தாலும் உங்களை எனக்குத் தெரியும், டெல்ஃபின் சொல்லியிருக்காங்க நிறையெ உங்களப்பத்தி.

சரி இந்தாங்க வாழ்(த்)துக்கள் உங்களின் பேத்தியின் நல்வரவிற்கு.

வல்லிசிம்ஹன் said...

தெக்கிகாட்டான் வாங்க.
ஆமாம் ரொம்ப மும்முரமா நான் இணையத்திலே போயி படிக்கிறது இல்லை.நீங்கள் சொல்வது சரி.பிழையில்லாமல் எழுத வேண்டும்,நாம் சொல்லும் பின்னூட்டம் நல்லதாக இருக்கணும்னு தோணும்.நீங்க வந்து வாழ்த்தியது நிறைய சந்தோஷமா இருக்கு.நல்ல மனம் நிறைந்த நன்றி.

Syam said...

குட்டி பாப்பாக்கு வரவேற்பும்,மன்மார்ந்த வாழ்த்துக்களும்... :-)

வல்லிசிம்ஹன் said...

ஹலொ ச்யாம்,
நன்றி.
பாப்பாகிட்டப் போயி பெருமையடிச்சுக்கப்போரேன்,
என் வலை நண்பர்களைப்பத்தி.