About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Friday, June 30, 2006

ஸ்ரி துர்கா தேவி
SRI DURGA MAATHA.
இந்தத் தாயைப் பார்க்கும்போதெல்லாம்
மனசில் சாந்தம் மகிழ்ச்சி ஆறுதல் எல்லாம் கிடைக்கும்.
எங்கள் மகன் வெளியூரில் வடக்குப் பக்கம் வேலை செய்யும்போது அவனிடம் போய் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது ஒரு சமயம் நம் பிள்ளையார்(!) சதுர்த்தி வந்தது. இங்கே இருந்தால் காலையில் எழுந்து பிள்ளயார் வாஙி வந்து தோரணம் கட்டிக் குடை வைத்து எருக்கமாலை போட்டு,விளாம்பழம், நாவல் பழம்,அருகம்புல் மூஞ்சூரு எல்லாம் அமர்க்களப்படும்.
அங்கே தேடியும் களிமண் பிள்ளயார் அகப்படவில்லை.
ஆதி ஹூம், ஜாதி ஹூம், நாம்,தும்,ஆப் கஹான், வஹான் இதெல்லாம் நம்ம பள்ளீக்கூடப் பாட இந்தியை ஒரு அம்மா புரிந்து கொண்டு " மாதா பூஜா கரொ" என்று இந்த துர்கா அம்மா படத்தைக் கொடுத்து விட்டாள்
கணேஷ் ! கணேஷ்! என்று நான் கேட்க உஸ்கி மாதா என்று அவள் சொல்ல ,சரிஎன்று பணம் கொடுத்துவிட்டு, மஞ்சள் ,சிவப்பு கலர் பூக்களை (பேர் தெரியாது)யும் வாங்கிக் கொண்டு,
என்னடாப்பா பிள்ளயாரைத் தேடி அம்மாவைக் கொண்டு வந்தாச்சே என்று யோசித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.
அடுத்த நாள் பிள்ளயாரை வழிபடப் படத்தை வைத்து மலர்கள் சூட்டி, பால்,தேன்,அவல், அதிரசம்,சுண்டல் என்று நைவேத்யம் செய்யும் நேரம் எங்களுக்கு உதவி செய்யும் சீதாம்மா வந்தாள்.
ரொம்ப கவனமாகப் பார்த்தவள் துர்காம்மா படத்தைப் பார்ததும், அப்படியே கீழெ விழுந்து மாதா தீ !ஜேய் மாதா 1 என்று கன்னத்தில் போட்டூக் கொண்டாள்.
அவள் பேசினதிலிருந்து நாங்கள்
வாங்கி வந்த படம் ச்ரி வைஷ்னோ தேவியின் படம் என்று தெரிந்தது.
அவளிடம் விவரம் கேட்டதில் வைஷ்ணோ தேவியின் இருப்பிடம் போய் வந்துவிட்டால் வாழ்வில் குறையே கிடையாது என்று சொன்னாள். உனக்கு எப்படி இந்தப் படம் கிடைத்தது/? என்று என்னை வேறு விசாரித்தாள்.
என் பதிலைக்கேட்டுக் கொண்டு நீ இந்த மாதாவை மறக்கக் கூடாது. யே க்ஷேராவாலி தும்கோ ஞான் தேகி'' என்று வேறு ஆசீர்வாதம் செய்தாள்.(இந்தி தெரிந்தவர்கள் என் எழுத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)

புலி மீது இருக்கும் அம்மாவை நானும் விடுவதாக இல்லை.இவள் புலி ,சிங்கம் என்று இரண்டு வாகனம். வேறு பெயர் இருக்கலாம். இவளை நான் துர்காம்மா என்று தான் நினைப்பேன்.
அத்தோடு விட்டாங்களா இந்த அம்மா.
அடுத்த நவராத்திரிக்கு காதி கிராமாத்யோக பவனம் போகும்போது,
அங்கு நின்று கொண்டு இருக்காங்க!!
முகம் அழகி, நகை அழகி, கை அழகி என்று ஒரு இடம் சொல்ல முடியாமல் எல்லாம் நிறைந்த பரிபூரணமான
அன்னை.
எதன் மேல் நின்றாள் தெரியுமா? மகிஷத்தின் மேல்!!
இதென்னடா இந்த அம்மா இப்படி வெற வேஎற மாதிரி வராங்களே என்று அங்கிருந்த பெண்களைக்கேட்டபோது
ஓ, அந்த அம்மா பட்டிச்வரம் துர்க்கை என்றார்கள்.
இதிலே விஷ்ணு துர்க்கை வேறாம்.
இவங்க ஒரு மூணூ அடி உய்ரம். தங்க நிறம். பேபர் மஷெ.யாலே ஆன பொம்மை என்று சொல்ல மனம் வரவில்லை.
அவங்க நின்ன கோலம் என்னைக் கூப்பிட்டு அழைத்தது.
வாங்கலாமா வேண்டாமா? கொலுவின் போது எல்லாரையும் கவர்ந்து இழுக்கும், உண்மைதான்.
பூஜை செய்யலாம். மாலை போடலாம்.போட்டொ எடுக்கலாம்..
எல்லாம் சரிதான்.
அதற்குப் பிற்ு? எப்படி வருடக் கணக்கில்; பாதுகாப்பது.?
அவங்களைப் பொட்டியில் வைக்க முடியுமா// இல்லை மனசு தான் வருமா?
மனசு வரத்தான் இல்லை.
ஆட்டொவில் குழந்தை மாதிரி கொண்டு வந்த நாளில் இருந்து இந்த அம்மா கொலு வீற்றிருக்க ஆரம்பித்தஆள்.
எனக்கு இருந்த பாசத்தில் இவங்களை ஹாலில் வைக்க(கொலுவுக்குப்
பிறகு) ம்னம் வரவில்லை.
சாமி ரூமுக்கு வந்துட்டாங்க. அங்கெ நடக்கும் பாராயணம்
,விளக்கு பூஜை, சும்மா
ஒண்ணுமே செய்யாத நாட்கள், ஒவராகப் பக்தி செலுத்தும் நாட்கள் எல்லவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
ஒரு கார்னரில் தான் இருந்தார்கள். அங்கே இருக்கக் காரணம், யாரவது அசப்பிலே தட்டி விடக்கூடதே என்பதற்காகத் தான்.
அதுவும் அழகாகத் தான் இருந்தது.
எட்டு கைகள். ஒட்டியாணம், கிரீடம், புன்னகை,விரிந்த காதளவோடு ஓடிய கண்கள். அதில் வழிந்த கருணை, செவியும், அதில் சூட்டப்பட்ட குழையும் நேரில் பார்த்தால் தான் தெரியும் அவள் அழகு.
இந்த அழகான அம்மாவை வீட்டில் விட்டு விட்டு,
வெளி நாடு போக வேண்டிய வாய்ப்பு வந்தது.
மாரிக்காலம். ஒரு மாதமே பொனாலும் மனசு கொஞ்சம்
சிரமப்பட்டது.
அந்த வருடம் அவ்வளவு மழை கூட இல்லை.
வீட்டைப் பார்த்துக் கொள்ள சொல்லி ஒருவரை
நியமித்து விட்டு ஒரு 30 நாட்கள் போய் வந்தோம்.
மிக அருமையான பயணம், மிகுந்த ம்ன நிறைவோடு
இந்தியா , சென்னை வந்தோம்.
வீட்டு வரும்போது மழை பெய்து கொண்டு இருந்தது.
இடி மின்னல் மழை.
மோஹினி தான் வரவில்லை.
வாசல் கதவைத் திறந்ததும் நேரே அப்பா கடவுளே என்று போனேன்.
கைகால் கழுவி சாமி அறைக் கதவைத் திறந்தால்
அன் துர்காம்மா கீழெ முகம் ப்டிய இருக்கிறாள்.
எனக்கு ந்றும் புரியவில்லை. என்ன்அ ஆச்சு? எப்படி ஸ்டூலில் இருந்து வந்தாள் கீழே?
சரி நிமிர்த்தி வைக்கலாம் என்று தொட்டால் .,.,.,.,
சரி அதை சொல்லவில்லை.
பிறகு அவளை குறைபாடோடு வைக்க மனமில்லாமல்
பிள்ளயாரை வருடா வருடம் சேர்க்கும் எங்க வீட்டுக் கிணற்றிலேயே , திருப்பி வரும்படி சொல்லித் தண்ணீருடன் கலக்க விட்டேன்.
அதற்குப்பிறகு இதே நினைப்பாக கொலுபொம்மை வாங்கப் போகும்போதெல்லாம் தேடுவேன். அவள் மீண்டும் வரவில்லை.
இந்த வருஷம் வருவாளோ?
படங்கள் இருக்கின்றன.
இருந்தாலும் எனக்கு அவங்களைத் திருப்பிப் பார்த்துவிடுவேன் என்று திட்டம்.
இந்த அம்மாவுக்குத்தான் திருப்பி வர மனம் வர வேண்டும்.